ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? பிரபல திரையரங்கம் வெளியிட்ட பதிவு
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.
சமீபத்தில் கூட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறந்த முறையில் நடந்து முடிந்தது.
இதன்பின் அனைத்து விஜய் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கும் ஒரே விஷயம் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தான்.
ஆனால் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் கொரானா வைரஸால் தமிழ் நாட்டில் அனைத்து திரையரங்கமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் இப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளிவராது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பிரபல ரோகினி தியேட்டர் உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மாஸ்டர் ரிலீஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் நேற்று இரவு நடைபெற்று விளக்கு ஏற்றும் நிகழ்வை குறிப்பிட்டு “ஏப்ரல் 9 காலை 4 மணிக்கு இப்படி தான் இருந்திருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/RohiniSilverScr/status/1246832888290504707?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1246832888290504707&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Ffilms%2F06%2F181263
கருத்துக்களேதுமில்லை