விஜய் எம்ஜிஆருக்கு சமம்.. எரிகிற தீயில் எண்ணையை ஊற்றிய பிரபல இயக்குனர்
தளபதி விஜய்யை எம்ஜிஆருக்கு சமம் என்று பிரபல இயக்குனர் கூறியது பல ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல ரசிகர்கள் வரவேற்றும் சில ரசிகர்கள் எதிர்த்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். விஜய் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் நாளுக்கு நாள் விஜய்யின் ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதற்கு சான்று தான் பிகில் படம் 300 கோடி வசூல் செய்தது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் தளபதி 65 படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். அதில் ஒருவர்தான் மகிழ் திருமேனி. இளைஞர்கள் மத்தியில் மகிழ் திருமேனியின் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் விரைவில் விஜய் படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தளபதி விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட்டு கூறியது தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, விஜய்யின் மிகப்பெரிய ரசிகர் நான் எனவும், எம்ஜிஆர் மற்றும் ரஜினியைப் போலவே ஒரு கதாபாத்திரமாக மாறும் திறமை கொண்டவர் எனவும் கூறியுள்ளார். மேலும் ஒப்பற்ற கலைஞன் எனவும் புகழ்ந்துள்ளார்.
விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட்டது அவரது ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தாலும் சக ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக விஜய்யை நிறைய நடிகர்கள் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கொரானா பிரச்சனைக்கு விஜய் எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது இந்த மாதிரியான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சனையை ஏற்படும் என்பதை அறிந்து தவிர்த்தல் நல்லது.
கருத்துக்களேதுமில்லை