மாஸ்டர் ரிலீஸ் ஆகும் நாள் இதான்.. அவசரப்பட்டு உளறிய விஜய்யின் நெருங்கிய நண்பர்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை பற்றிய அறிவிப்பை விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அனிருத் இசையமைத்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ஆம் தேதி முடிவடைந்தது. ஏப்ரல் 9ம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது.
இதனால் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மார்ச் 22ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் நிலவியது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் தளபதி விஜய்யின் பால்ய நண்பர் சஞ்ஜீவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 22-ம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்பதை போல குறிப்பிட்டிருந்தார். அதாவது தளபதி விஜய்யின் பிறந்த நாளன்று மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளார்.
இது உண்மையிலேயே சஞ்சீவ் கூறியதா அல்லது போலி கணக்குகள் செய்த வேலையா என்பது தெரியவில்லை. ஆனால் செய்தி வெளியாகிய சிறிது நேரத்திலேயே பெரும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை