வெளக்கமாரை வைத்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம்.. விஜய் ரசிகர்களை வெறி ஏத்திய VJ ரம்யா
மக்களால் எளிதில் அறியப்படும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் VJரம்யா. திருமணம் செய்துகொண்டு தனது கணவரை ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்துவிட்டு தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஓகே கண்மணி படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதனை அடுத்து தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளாராம் ரம்யா. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் அவ்வப்போது தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது மற்றும் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோக்களை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.
அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் உருவாகியிருக்கும் வாத்தி கமிங் என்ற பாடலுக்கு தொடப்ப கட்டையை கையில் கொண்டு நடனம் ஆடியது பார்ப்பதற்கே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு இருந்தது.
இதனையடுத்து ரம்யா சமுத்திரக்கனி படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயின் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது வெற்றிமாறன் தயாரித்துள்ள அந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை