தனி ஒருவன் 2 படத்தில் தல அஜித்.. இனிமேதான் முழு வில்லனை பார்க்க போறீங்க
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே டாப் ஹீரோக்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள். அந்த வகையில் மோகன்ராஜா தமிழ் சினிமாவில் டப்பிங் இயக்குனர் என்று அனைவராலும் தவறாக சித்தரிக்கப்பட்டார்.
அந்த தவறான விமர்சனத்தை அடியோடு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெறித்தனமாக உருவான கதைதான் தனிஒருவன். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாஸ் ஹீரோ மற்றும் வில்லன் சப்ஜெக்டான தனி ஒருவன் படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது, ஐந்து மடங்கு அதாவது 105 கோடி வரை வசூல் செய்தது. தமிழ் சினிமாவை பொருத்தவரை இது மாபெரும் வெற்றி என்று கொண்டாடினார்கள்.
இந்த கதாபாத்திரம் உருவாகுவதற்கு முக்கியமான காரணம் மங்காத்தா படத்தில் தல அஜித் நெகட்டிவ் ஹீரோவாக நடித்தது இன்ஸ்பிரேஷனாக இருந்ததாம். இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் தல அஜித்தை வைத்து தான் கதை எழுதினாராம்.
ஆனால் அவர் நடிக்க முடியாத சூழ்நிலையில் பின்பு அரவிந்த் சாமிக்கு இந்த கதாபாத்திரம் கைமாறியது. இதனை மோகன்ராஜா ஒரு பேட்டியில் கூறியிருப்பார். இதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தை தூக்கி சாப்பிட்டிருப்பார் அரவிந்த்சாமி என்றே கூறலாம்.
அப்படி தல அஜித் வில்லனாக நடித்திருந்தால் கண்டிப்பாக தளபதி விஜய் ஹீரோவாக இருந்தால் மட்டுமே இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கும். அதற்கான வாய்ப்புகள் சாத்தியமே இல்லை.
அதனால் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று கூட யோசித்தார்களாம். அஜித் வில்லன் என்றால் வேறு ஒருவரை ஹீரோவா நடிக்க வைக்கவே முடியாது. அதனால் அஜித்தே இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தால் மாஸ் காட்டலாம் என நினைத்தார்கள். ஆனால் முதல் பாகத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து விட்டதால் வில்லன் கேரக்டரில் தல நடித்தால் படம் பிச்சிக்கிட்டு போகுமாம். அதற்கு அஜித் மட்டும் ஓகே சொன்னால் மட்டுமே சாத்தியம்.
கருத்துக்களேதுமில்லை