கனடாவில் நேற்று மாத்திரம் 84 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
இன்று ஈஸ்டர் பண்டிகை நாள் என்ற நிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர்.
கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில நேற்றுமட்டும் 84 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 653 ஆகப் பதிவாகியுள்ளன.
இதேவேளை, ஆசியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இதுவரை உள்ள நிலையில் நேற்று மொத்தமாகவே 373 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதில், அதிகபட்சமாக ஈரானில் நேற்று 125 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் துருக்கியில் 95 பேரும் இந்தியாவில் 39 பேரும், பாகிஸ்தானில் 20 பேரும் நேற்று மரணித்துள்ளதுடன் பிலிப்பைன்ஸில் 26 பேரும் இந்தோனேஷியாவில் 21 பேரும் நேற்று மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை