கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஆயிரம் முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைப்பு…

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக  இலவசமாக ஆயிரம் முகக் கவசங்கள் கல்முனையில் உள்ள வறிய குடும்பங்களுக்கு   வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை வடக்கு  பிரதேச செயலாளர் செயலாளர் ரி.ஜே அதிசயராஜ்   வழிகாட்டலின்   கல்முனை 2  சமுதாய அடிப்படை சங்கங்களின்  பிரிவிற்குட்பட்ட வாழ்வாதாரங்களை இழந்து  பாதிக்கப்பட்ட
வறிய குடும்பங்களுக்கு   சுமார் ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை(13) மதியம்  இலவசமாக  முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் சமூர்த்தி  தலைமைத்துவ  முகாமையாளர் கே இதயராஜ்  திட்ட முகாமையாளர் என். நஜீம்    சமுர்த்தி உத்தியோகத்தர்களான எம். தயாழினி,  வ. விமலராஜ் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ. ஞானபிரகாசம் கல்முனை 2 பிரிவுக்கான   கிராம சேவகர் எஸ் அருள்ராஜா  ஆகியோர் கலந்து கொண்டு முகக்கவசங்களை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.