கொரோனா தொற்று சந்தேகத்தில் கொழும்பில் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்! – தேசிய வைத்தியசாலையில் சேர்ப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வெளிநாட்டு வர்த்தகக் கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த கப்பலுக்கு சேவை வழங்கும் உள்நாட்டு நிறுவனமொன்று கொரோனா தொற்றை ஒழிக்கும் தேசிய மத்திய நிலையத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, குறித்த கடற்படை வீரர் நேற்று துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான கடற்படை வீரர் ஒருவருக்கே தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. துறைமுக வளாகத்தில் பூரண கிருமி ஒழிப்புக்கு உட்படுத்தப்பட்ட அவர், நோயாளர் காவு வண்டியில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை