கறியும் முட்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது… ஏன் தெரியுமா?

நாம் விரும்பிச் சாப்பிடும் சில உணவு காம்பினேஷ்கள் உண்மையிலேயே நம்முடைய உடலுக்கு ஏற்புடையவை அல்ல. அந்த இரண்டு உணவுகளுமே ஆரோக்கியமானவையாக இருநு்தாலும் கூட அவற்றைத் தனித்தனியே எடுத்துக் கொள்ளும் போது அதன் முழு பலன்களும் கிடைக்கும். ஆனால், அவற்றை சேர்த்து சாப்பிடும் பொழுது, அவற்றில் உள்ள ஏதேனும் ஒரு பொருள் நம் உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும். அப்படி நாம் வழக்கமாக சேர்த்து சாப்பிடும் என்னென்ன உணவுகளை அப்படி சாப்பிடக் கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எல்லா வகை உணவுகளுக்கும் பொருந்தும்.

samayam tamil

பன்றி இறைச்சி சாப்ஸ் (pork chops) மற்றும் அதனுடன் இணைந்த ஆப்பிள் சாஸ் (apple sauce) போன்ற உணவு கலவைகள் மிகவும் ருசியானது. இதன் ருசியை எனது அம்மா பாற்கடலில் கிடைக்கும் அமிர்தத்துடன் ஒப்பிட்டு கூறும்போது நான் அதை நம்பவில்லை.

ஆனால், நான் இந்த உணவு கலவையை ருசித்த பின் என் அம்மாவின் வார்த்தைகளை ஒத்து கொள்கிறேன். சொல்லப்போனால், எல்லா உணவு வகைகளும் ஒன்றாக உருவாக்கப்படுவதில்லை. உண்மையில், நமக்கு பிடித்த பல உணவு காம்போக்கள் நம் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

தவறான முறையில் சேர்க்கப்படும் சமநிலையற்ற உணவுகள் வாயு, அஜீரணம் மற்றும் பலதரப்பட்ட நோய்களைக் நமக்கு ஏற்படுத்தும் என்று சில ஆயுர்வேத நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால், நம் உடலில் தேவையற்ற நச்சுகள் உருவாகின்றன. நீங்கள், உங்கள் அடுத்த வேளை உணவைத் உண்பதற்கு முன், உணவு சேர்க்கைகள் பற்றிய சில உண்மைகளை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

​தக்காளி மற்றும் வெள்ளரிக்காயின் கலவை

samayam tamil

நீங்கள் தினமும் காய்கறி சாலட் உண்பவரா? அதில் பொதுவாக தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நாம் அனைவரும் சேர்ப்போம். ஆனால் இந்த இரண்டு காய்கறியும் ஒன்றாக சாப்பிடும்போது உங்கள் உடம்பிற்கு கண்டிப்பாக அது தீங்கு விளைவிக்கும்.

ஆனால், சாலட் ஆரோக்கியமானதல்லவா? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் ஆம் தான். ஆனால், தக்காளி மற்றும் வெள்ளரியை சேர்த்து உண்ணும் போது அது நம் வயிற்றில் எதிரிகளாக மாறிவிடுகின்றன. .

தக்காளி வைட்டமின் சி நிறைந்த ஒரு பழம் ஆகும். யு.எஸ்.டி.ஏ (USDA United States Department of Agriculture) நிறுவனம் கூறுகையில் ஒரு ஆரஞ்சு பழத்தை விட தக்காளியில் அதிக சத்து உள்ளது என்று தெரிகிறது.

இருப்பினும், நீங்கள் தக்காளியை வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடும்போது, தக்காளியில் உள்ள வைட்டமின் சி வெள்ளரிக்கையினால் உறிஞ்சப்படுகிறது.

இது உங்கள் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும், மேலும் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வழி வகுக்கும்.

​தேநீர் (Tea) மற்றும் பால் கலவை

samayam tamil

தேநீரில் சிறிது பால் கலந்து குடிப்பது என்பது நாம் காலம் காலமாக செய்யும் ஒரு செயலாகும். இருப்பினும், இந்த கலவை நாம் உடலிற்கு நல்லது அல்ல. தேநீர் (Tea) குடிப்பதினால் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் இது நன்மை அளிக்கும்.

இருப்பினும், கேசின்கள் எனப்படும் பாலில் உள்ள புரதங்கள் தேநீர்யுடன் சேர்ந்து நம் வயிற்றில் ஜீரணிக்கும் போது சில தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால், பால் மற்றும் தேநீர் (Tea) முலம் கிடைக்கும் நன்மைகளை நாம் உடலால் பெற இயலாது.

​தர்பூசணி மற்றும் எல்லா வகை உணவின் கலவை

samayam tamil

தர்பூசணி என்பது அனைவருக்கும் பிடித்த கோடைகால பழமாகும்.

இந்த நாட்களில், மக்கள் இதனை ஜூஸ்யாகவோ அல்லது சாலட்டில் தர்பூசணி துண்டுகளை சேர்த்து உண்பது போன்ற செயல்களைச் செய்வதை நீங்கள் காணலாம்.இதன் சுவை அருமையாக இருந்தாலும், உங்கள் வயிற்றை பொறுத்தவரை மற்ற உணவு பொருளுடன் தர்பூசணி பழத்தை சேர்த்து உண்பது நல்லது அல்ல.

தர்பூசிணி பழத்தை பாலுடன் சேர்த்து உண்ணும் போது அது நமது உடலில் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று ஆயுர்வேத நிறுவனம் நமக்கு விளக்குகிறது. எனவே நீங்கள் உண்ட தர்பூசிணி உங்கள் வயிற்றை குளிர்விக்க தொடங்கும் போது, அதுனுடன் சேர்க்கப்பட்ட பால் உங்கள் வயிற்றில் கசக்க தொடங்கிவிடும். உண்மையில், தர்பூசிணி மற்ற உணவுகளை விட வேகமாக ஜீரணிக்கிறது. எனவே இந்த பழத்தை மற்ற உணவு பொருளுடன் சேர்க்காமல் தனித்து உண்பதே நமது உடலிற்கு நல்லது.

​இறைச்சி மற்றும் முட்டை கலவை

samayam tamil

இறைச்சி மற்றும் முட்டை இரண்டிலுமே மிக அதிக அளவிலான புரதச் சத்து நிறைந்திருக்கிறது.

இருப்பினும், இந்த இரண்டு பொருட்களையும் சேர்க்கும் போது மிக அதிக அளவில் புரத சத்து கிடைக்கிறது. இந்த புரதமானது, உங்கள் தினசரி பரிந்துரைக்கப்பட்ட கலோரியை விட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு பதிலாக, ஒரு காய்கறி ஆம்லெட்டை நாம் உண்ணலாம். இதன் மூலம் நீங்கள் சிறிது இறைச்சி அல்லது புரதத்தை சுவைக்கலாம்.

​தயிர் மற்றும் பழம் கலவை

samayam tamil

லாரா கேஸ்லி கூறுகையில், நாம் மற்ற உணவுகளுடன் பால் பொருட்களை சேர்த்து உண்பது சரியானது அல்ல. ஏனென்றால் நம் வயிறு பால் பொருட்களை மற்ற உணவுகளை விட வித்தியாசமான வேகத்தில் ஜீரணிக்கின்றன.

குறிப்பாக தயிரை பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் பால் செரிமானத்தில் குறுக்கிடும்..

ஒரு தயிர் பர்பாய்ட் (parfait) என்பது நல்ல ருசியான உணவாகும். ஆனால், அதற்கு நீங்கள் உண்மையில் இந்த உணவுகளை தனியாக உண்ண வேண்டும்.

​வாழைப்பழம் மற்றும் பால் கலவை

samayam tamil

லாரா கேஸ்லி கூறுகையில், பாலுடன் சேர்த்து செய்யப்படும் வாழைப்பழ ஸ்மூத்தி என்பது சுவையான மற்றும் ஆரோக்கியமான பானம் ஆகும். ஆனால் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் இதனை வேறுவிதமாக நமக்கு கூறுக்கிறார்கள்.

ஆயுர்வேத நிறுவனத்தின் கூற்றின் படி, வாழைப்பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றின் கலவை மிக தவறான சேர்கையாக கருதப்படுகிறது.

ஏனென்றால் அவை எதிர் வெப்பமாக்கல் மற்றும் குளிர்ந்த செரிமான வடிவங்களைக் கொண்டுள்ளன.

இதனால், நமது குடல் சம்மந்தப்பட்ட செயல்களை இது சீர்குலைக்கிறது. மேலும் ஒவ்வாமை மற்றும் சளி உற்பத்தியைத் தூண்டும்

​ரொட்டி மற்றும் சீஸ் கலவை

samayam tamil

வறுக்கப்பட்ட சீஸ் சாண்ட்விச் என்பது நம்மில் பெரும்பாலோர் சொந்தமாக சமைக்க கற்றுக்கொண்ட முதல் விஷயம் ஆகும்.

இது எளிதானது மற்றும் சுவையானதாக கூட இருக்கலாம், ஆனால் இந்தகலவை உங்கள் வயிற்றுக்கு நல்லது அல்ல. ஏனெனில் புரதங்கள் மற்றும் மாவுச்சத்துக்களை உங்கள் உடல் வித்தியாசமாக செரிக்கின்றன.

இவற்றை சேர்த்து சாப்பிடும்போது, உங்கள் வயிறு எதனை முதலில் ஜீரணிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும், மேலும் பெரும்பாலும் மாவுச்சத்துக்கள் தாமதமாக செரிக்க படும். மைண்ட் பாடி க்ரீன் என்பது (Mind Body Green), செரிக்கப்படாத மாவுச்சத்து உணவு நொதித்தலுக்கு உட்படும் என்றும் இவ்வாறு உண்ணும் உணவு நம் உடலில் விஷமாக மாறக்கூடும் என்றும் கூறுகிறார்.

​லாசக்னா (Lasagna)

samayam tamil

லாசக்னா (Lasagna) என்பது ஒரு வகை அகலமான, தட்டையான பாஸ்தா உணவாகும். இது பாஸ்தாவின் பழமையான வகைகளில் ஒன்றாகும்.

லாசாக்னே, அல்லது ஒருமை லாசக்னா (singular lasagna) என்பது தட்டையான பாஸ்தாவில் சேர்க்கப்படும் காய்கறிகள், சீஸ், சுவையூட்டிகள், பூண்டு, ஆர்கனோ (oregano) மற்றும் துளசி (basil) போன்ற மசாலாப் பொருட்களுடன் செய்யப்படும் ஒரு இத்தாலிய உணவாகும்

இந்த லாசக்னா எல்லா காலத்திலும் நமக்கு மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் உணவுகளில் ஒன்றாகும், ஆனால் நீங்கள் இதனை உண்டபின் எப்படி உணர்கிறீர்கள் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?

வறுக்கப்பட்ட சீஸ் இதில் சேர்க்கப்படுவது போன்ற பல காரணங்களுக்காக இந்த உணவு சேர்க்கை நம் உடலிற்கு நல்லது அல்ல. இதனை தக்காளி சாஸ்யுடன் சேர்த்து உண்பது என்பது மேலும் கெடுதலாகும்.

கார்போஹைட்ரேட்டுகள், பால், புரதம் மற்றும் அமிலங்கள் போன்ற உணவுகளை ஜீரணிக்க உங்கள் உடல் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும், இதனால் உங்கள் உடலில் அதிக ஆற்றல் வீணாக கூடும்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.