யாழ். சிறைச்சாலையில் கஞ்சா சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தலில்…
வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்பகுதியில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துக் கலாநிதி ஆ.கேதீஸ்வரனின் பணிப்புக்கு அமைவாகவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து இந்தியக் கடத்தல்காரர்களிடமிருந்தே இவர்கள் கஞ்சாவைப் பெற்றுக்கொண்டனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
இவர்கள் பருத்தித்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் கொரோனாத் தொற்றுச் சோதனை அவர்களுக்கு முன்னெடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை