கொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்
மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 1,038 இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசிய அரசு நாடுகடத்தியிருக்கிறது.
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மற்றும் மேடான் நகருக்கு இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள், வேலைக்கான விசாயின்றியும் விசா காலம் கடந்தும் மலேசியாவில் வேலை செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் நாடுகடத்தப்படுவது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்றாலும், தற்போதைய நாடுகடத்தல் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை