இந்த மாதிரி மூச்சு விட்டாலே வயித்துல இருக்கற கொழுப்பெல்லாம் குறைஞ்சிடுமாம்…
உடலை சிக்கென்று வைக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது ஆனால் பெரும்பாலும் நாம் சாப்பிடும் ஜங் உணவுகள் கொழுப்புகளா மாறி வயிற்றில் சேர்ந்து தொப்பையாக மாறிவிடுகிறது.அப்படி வயிற்றில் சேர்ந்த கொழுப்பு ரொம்ப பிடிவாதமான கொழுப்பு, நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அதனை அகற்றுவது மிகக் கடினம். நாம் என்ன தான் செய்தாலும் வயிற்று கொழுப்பு கரையாது. இது மோசமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான சுகாதார சிக்கல்களும் ஆகும், ஏனெனில் இது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பு உள்ளவர்களுக்கு பொதுவாக மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றிக்கு பெரும்பாலும் ஆளாவார்கள். தொப்பை கொழுப்பை அகற்றுவது கடினம் என்றாலும் அதனை அகற்றுவது சாத்தியமாகும்.
எடை குறைய
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலே நம் மனதில் தோற்றும் முதல் விஷயம் ஜிம் தான்.ஆனால் ஜிம் விட எளிதாக நம் உடல் எடையை குறைக்க வழியிருக்கிறது. ஆரோக்கியமான உணவுடன் இதய பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை படி படியாக குறைய ஆரம்பிக்கும். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களுக்கு அதனை விரும்பாதவர்களுக்கும் வீட்டிலே செய்யக்கூடிய 4 மூச்சிப்பயிற்சி இருக்கிறது. அதனை முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் இந்த மூச்சிப்பயிற்சியும் தொடர்ச்சியாக செய்து வந்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
ஆழமான சுவாசப் பயிற்சி எவ்வாறு உதவும்?
சுவாச பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், வயிற்று தசைகளின் மேல் இருக்கும் கொழுப்பை அகற்றவும் உதவுகின்றது.அது மட்டுமல்லாமல் சுவாசப் பயிற்சி செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
ஆழ்ந்த சுவாசம் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளிப்பதை அதிகரிக்கிறது, மற்றும் உங்கள் உடலுக்கு வழங்கப்படும் இந்த அதிகபடியான ஆக்ஸிஜன் உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. ஆழமாக சுவாசிப்பதால் நம் உடலின் இரத்த ஓட்டம் மேம்படுகிறது மற்றும் வயிற்று தசைகளை தொனி செய்கிறது.
மனித உடல் 70 சதவீத நச்சுக்களை சுவாசத்தின் மூலம் வெளியிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா மற்றும் மேலோட்டமான சுவாசம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களைத் திரட்டுகிறது, இதனால் காலப்போக்கில் நோயின் வளர்ச்சிக்கு இது வழிவகுகிறது.
உதரவிதானம் சுவாசம் (Diaphgram Breathing)
உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ள உடற்பயிற்சியில் ஒன்று, உதரவிதானம் சுவாசப்பயிற்சி,இந்த பயிற்சி உங்கள் வயிற்று தசைகளை நெகிழ வைக்க உதவுகிறது.. சுவாசிக்கும்போது உங்கள் உதரவிதானம் ஈடுபடுவதால் உங்கள் நுரையீரல் திறன் அதிகரிக்கும். மேலும், இது உங்கள் வயிற்றுக்கு தொனி செய்வதற்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும்.
இந்த பயிற்சியைச் செய்ய தரையில் தட்டையாக படுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் மார்பு மற்றும் வயிறுப் பகுதி மேலும் கீழும் நகரும். ஒவ்வொரு முறையும் ஆழமாக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். இந்த பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் கண்டிப்பாக சாப்பிடவுடன் செய்யக்கூடாது.
மண்டை ஓடு சுவாசம் (Shining the skull breathing)
இந்த சுவாசப் பயிற்சி முறை வயிற்றின் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் சுவாச பிரச்சினைகளை நீக்குகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது ஒரு வசதியான நிலையில் அமர்ந்து மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியிட வேண்டும் அவ்வாறு செய்யும் போது உங்கள் வயிற்றின் தசைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.இதே போல் 10 முறை மூச்சை உள்ளிழுத்து விடவேண்டும் பின்னர் 5 விநாடி சாதாரணமாக சுவாசிக்க வேண்டும்.இதனை 3 முறைகள் பத்து பத்து தடவை செய்ய வேண்டும்.
தொப்பை சுவாசம் (Belly Breathing)
உங்கள் வயிற்றில் இருந்து சுவாசிக்கும் போது உங்கள் உதரவிதானம் மற்றும் உங்கள் நுரையீரலுக்குக் கீழே உள்ள தசைகள் மீது கவனம் செலுத்தப்படும். இந்த உடற்பயிற்சியினால் உங்கள் சகிப்புத்தன்மை மற்றும் ஆற்றல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நம்மில் தோன்றும் தேவையற்ற பதற்றப்படும் பிரச்சினைகளை குணப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த பயிற்சியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும்.
இந்த பயிற்சியை அமர்ந்து கொண்டும் செய்யலாம் நின்றுகொண்டும் உங்களின் வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம். எதையும் பற்றி சிந்திக்காமல் உங்கள் மனதை அமைதி படுத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் வயிற்றில் கையை வைக்கவும், உங்கள் கட்டைவிரல் தொப்பையின் அருகில் இருக்க வேண்டும். நீங்கள் இந்த உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மார்பு உயரக்கூடாது மற்றும் உங்கள் வயிறு விரிவடைய வேண்டும்.
வாய் சுவாசம் (Mouth Breathing)
நீங்கள் உங்கள் வாய் வழியாக சுவாசிக்கும்போது அது உங்கள் வயிற்று தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது, இது உங்களுக்கு புத்துணர்ச்சியையும், நிதானமான உணர்வையும் தருகிறது,மற்றும் தொப்பை கொழுப்பை இழக்கவும் உதவுகிறது. இந்த உடற்பயிற்சியைச் செய்வதன் மூலம் உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் கன்னங்களில் உள்ள தேவையற்ற சதைகளையும் குறைக்கும்.
இந்த பயிற்சியைச் செய்ய, உங்கள் வாயைத் திறந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சை வெளியிடும் நேரம் உள்ளிழுக்கும் நேரத்தை விட இரு மடங்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் மூன்று முறை இதைப் பயிற்சி செய்யலாம்.
கருத்துக்களேதுமில்லை