மன்னாரில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டத்தை நாடு சீராகும் வரை இடை நிறுத்த மன்னார் பிரதேச சபையில் தீர்மானம்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)

மன்னார் பிரதேச சபை கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெற்று வந்த காற்றாலை
மின் உற்பத்தி வேலைத் திட்டம் கொனோரா வைரஸ் தொற்று நோய் காரணமாக இடை
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் இன்னும் கொனோரா தொற்று
நோய் அச்சம் நீங்காத நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தடை விதிக்குமாறு
கோரி மன்னார் பிரதேச சபை மாதாந்தக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 25 வது மாதாந்தக் கூட்டம்  வியாழக் கிழமை
(16.04.2020) இதன் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஐஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் மன்னார் பிரதேச சபை கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து
வரும் தலைமன்னார் மன்னார் விதியில் அமைந்துள்ள நடுக்குடா பகுதியில்
இடம்பெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலைய அபிவிருத்தி வேலை விடயமாக
பிரஸ்தாபிக்கப்பட்டது.

நாட்டில் கொனோரா வைரஸ் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டதைத் தொடாந்து நாடு
பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு இவை இடையிடையே
தளர்த்தப்பட்டு பின் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இலங்கை பூராகவும் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இடை
நிறுத்தப்பட்டு தொழிற் ஸ்தாபனங்களும் முடக்கப்பட்டு காணப்படுகின்றன.

கொனோரா தொற்று நோய் அச்சம் காரணமாக இவைகள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்
வேளையில் நாட்டில் இன்னும் கொனோரா அச்ச நிலை நீங்காத நிலையில் மன்னாரில்
இடை நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்களும் வெளி மாவட்டவர்களும்
ஈடுபட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீண்டும்
ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புக்களை நாடு சீராகும் வரை உடன் நிறுத்த
வேண்டும் என  வியாழக்கிழமை (16.04.2020) நடைபெற்ற  மன்னார் பிரதேச
சபையின் மாதாந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் வெளிநாட்டவரும் வெளி மாவட்டவர்களும்
ஈடுபட்டு வருவதால் இவ் வாழ் மக்கள் மத்தியில் கொனோரா அச்சம் நிலவி
வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

ஆகவே இது விடயமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மற்றும் செயலனி
குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டு இவ் திட்டத்தை நாடு சீராகும் வரைக்கும்
இடை நிறுத்தக் கோருவது என ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.