விஜய் இருக்க வேண்டிய இடத்தில் பிரசாந்த்.. அசத்தலான மேட்டர் சொன்ன பிரபல இயக்குனர்

சமீபகாலமாக வேண்டுமானால் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு பல நடிகர்களிடம் போட்டி இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் உச்சத்தில் இருந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த்.

பிரசாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம். விஜய், அஜித் ஆகியோர் அப்போதுதான் தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வின்னர் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் உடல் எடை கூடி ஹீரோவுக்கான அம்சமே இல்லாமல் ஆகிவிட்டார்.

அப்பொழுது விழுந்த மார்க்கெட் தான் தற்போது வரை பிரசாந்த்தால் ஒரு வெற்றி கூட கொடுக்க முடியவில்லை. பிரசாந்த் டாப்பில் இருந்த காலத்தில் விஜய்க்காக எழுதப்பட்ட கதை ஒன்றில் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தாராம்.

தமிழ் சினிமாவில் பல புதுமையான கதைகளை கொடுத்த வெற்றியை பெற்றவர்தான் இயக்குனர் சுசி கணேசன். பிரசாந்த் சினேகா நடிப்பில் உருவாகி 2002 ஆம் ஆண்டு பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் விரும்புகிறேன்.

இந்த படத்தின் கதை முதன்முதலில் தளபதி விஜய்யை வைத்து தான் எழுதப்பட்டது. இந்த கதை தொடர்பாக விஜய்யின் தந்தை சந்திரசேகரிடம் கூறியபோது படத்தில் கொஞ்சம் ஆக்ஷன் காட்சிகளை சேர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் விஜய் ஓகே சொல்வதற்குள் அந்த கதை பிரசாந்த்திடம் சென்று உடனடியாக படப்பிடிப்பு நடத்த துவங்கி விட்டார்களாம். இடையில் நடிகர் முரளியிடம் இந்த கதை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. 18 வருடங்களுக்கு பிறகு பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் சுசி கணேசன் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.