அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக நடவடிக்கை வேண்டும் – கரு

தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நிவாரண பொருட்களை வழங்குபவர்கள் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆனால் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கே வழங்கப்படும் நிவாரண பொருட்களை தங்கள் சொந்த அரசியல் நலுனுக்காக பயன்படுத்திக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் சில பகுதிகளில் அரசியல் தேவைகளுக்கு அமைவாக பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். இக்காலகட்டத்தில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பக்கச்சார்பின்றி தீர்வு வழங்கப்படுவது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.