5 ஆயிரம் பஸ்கள், 400 ரயில்கள் 20 இற்குப் பின்னர் சேவையில்!!
எதிர்வரும் 20ஆம் திகதிப் பின்னர் பஸ்கள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றைப் பொதுப்போக்குவரத்துப் சேவையில் ஈடுபடுத்த அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கமைவாக 5 ஆயிரம் அரச பஸ்களும் மற்றும் 400 ரயில்களும் சேவையில் ஈடுபடும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொதுப்போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்றாதிருப்பதற்கும் இந்தக் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை