தமிழ் சி.என்.என். குழும நிவாரணப் பணிக்கு  கனடா K2B நடனக்கல்லூரியும் நிதி உதவி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு தென்மராட்சிப் பகுதிக்கு கனடா K2B நடனக்கல்லூரி இயக்குநர்கள் பாசா, கரூன் மற்றும் குமரன்  என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வடக்கு, மீசாலை மேற்கு மற்றும் இராமாவில் கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

தென்மராட்சிப் பகுதியில் இவர்களின் செயற்பாட்டுக்கு கனடா K2B நடனக்கல்லூரி இயக்குநர்கள் பாசா, கரூன் மற்றும் குமரன்  என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்களின் நிதிப்பங்களிப்பில் இந்த 30 குடும்பத்தினருக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது. 

இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த லோஜன், தமிழ் சி.என்.என். குழும உறுப்பினர்களான புவிராஜ், வினுசன்  ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.