மாஸ்க் அணியும்போது என்னென்ன தவறுகளை செய்யக் கூடாது?…
கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த வைரஸ் பரவ கூடும்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.இந்த வைரஸால் தாக்கப்பட்ட நான்கில் ஒருவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைவதாக தெரிகிறது. இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மாஸ்க்கின் முக்கியத்துவம்
இதுவரை, இந்த வைரஸுக்கு எந்த ஒரு சிகிச்சையோ அல்லது மருந்தோ கண்டுபிடிக்க படவில்லை. இதனால், பல மாநிலங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடி (Mask) அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.
இதன் மூலம், கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க மக்களும் அரசாங்கமும் தங்களால் ஆன முயற்சியைச் செய்கிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தி என்றாலும், இதில் மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் பலருக்கு இந்த முகமூடியை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்பதே.
உங்கள் முகமூடியை நீங்கள் அணிந்த பிறகு மூச்சுத்திணறல் ஏற்படுவது போல உணர்ந்தால், நீங்கள் அதை சரியாக அணிந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்கள் செய்யும் மிகப் பெரிய தவறுகளில் ஒன்று, பொது இடங்களில் பேசும்போது அவர்களின் முகமூடியை கன்னத்தின் கீழ் இறக்குவது, இது முற்றிலும் தவறான செயல்.
மாஸ்க் எப்படி சரியாக அணிவது?
மாஸ்க் அணிந்த பிறகு செய்ய கூடாத செயல்கள் எவை???? வாருங்கள் இக்கட்டுரையில் காண்போம்:
மாஸ்க்குகளை எப்போது, எப்படிப் பயன்படுத்துவது:
1.நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில், கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை நீங்கள் கவனித்துக்கொண்டால் மட்டுமே நீங்கள் முகமூடி அணிய வேண்டியது அவசியமாகிறது.
2. உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் இருக்குமானால் முகமூடி அணிந்து கொள்ளுங்கள்.
3. முகமூடி அணிபவர்கள், ஆல்கஹால் அடிப்படையிலான கை துடைப்பு அல்லது சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு அடிக்கடி கை சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் அணிந்துள்ள முகமூடிகள் பயனுள்ளதாக இருக்கும்.
4.நீங்கள் முகமூடி அணிவதற்கு முன், அதை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதை முறையாக எவ்வாறு அப்புறப்படுத்துவது போன்ற விவரங்கள் உங்களுக்குத் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
செய்ய கூடாத செயல்கள்
1. மாஸ்க்கைப் போடுவதற்கு முன், ஆல்கஹால் அடிப்படையிலான கை தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2. உங்கள் மூக்குக்கு கீழே மாஸ்க் அணிவது தவறானது.
3. முடிந்தவரை, உங்கள் மாஸ்க்கைக் கொண்டு கன்னத்தையும் மறைத்து கொள்ளுங்கள்.
4. உங்கள் மாஸ்க் தளர்வாகவோ (loose) அல்லது இடைவெளி (Gaps) விட்டு இருந்தாலோ அணிய வேண்டாம். (இதனால், நமக்கு எந்த பயனும் கிடைக்காது).
5. நீங்கள் அணியும் மாஸ்க் உங்கள் மூக்கின் நுனியை மட்டும் மறைப்பதாக இருக்க கூடாது.
6. மற்றவர்களுடன் பேசும் போது உங்கள் மாஸ்க்கை கழுத்திற்கு தள்ள வேண்டாம். முகமூடியை அணிந்து கொண்டே பேசுங்கள்.
7. மறக்காதீர்கள், உங்கள் மாஸ்க் வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக மறைக்கவேண்டும். உங்கள் முகத்திற்கும் மாஸ்க்குக்கும் இடையில் எந்த ஒரு இடைவெளியும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
8. முகமூடியைப் பயன்படுத்தும் போது அதைத் தொடுவதைத் தவிர்க்கவும்; நீங்கள் அவ்வாறு செய்தால், ஆல்கஹால் சேர்க்கப்பட்ட ஹேண்ட் சானிடைசர் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள்.
9. நீங்கள் அணிந்து இருக்கும் முகமூடி ஈரமானவுடன் புதியதை மாற்றவும். மற்றும் ஒற்றை பயன்பாட்டு மாஸ்க்குகளை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
மாஸ்க் அகற்றும் முறை
பின்னால் இருந்து அகற்றவும் (முகமூடியின் முன் தொடக்கூடாது);
அது ஒற்றை பயன்பாட்டு முகமூடியாக இருப்பின், மூடிய குப்பை தொட்டியில் உடனடியாக போடவும்.
பின்னர், ஆல்கஹால் அடிப்படையிலான கை தேய்த்தல் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கண்டிப்பாக சுத்தம் செய்யுங்கள்.
அணிய சரியான வழி
உங்கள் மாஸ்க்கை உங்கள் மூக்கின் மேல் மற்றும் உங்கள் கன்னத்தின் கீழ் வரும் வரை அணியுங்கள்.
பின்னர், மாஸ்க் இடைவெளிகள் இல்லாமல் உங்கள் முகத்தைச் சுற்றி வளைக்க வேண்டும். மாஸ்க்கின் சுழல்களை (loops) இறுக்கமாக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
கருத்துக்களேதுமில்லை