அம்பாறையிலும் வழமைக்குத் திரும்பியது இயல்பு வாழ்க்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அம்பாறை, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக் கடைகள், வீதியோர வியாபாரங்கள் போன்றவை வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும் சில இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும், அரச, தனியார் போக்குவரத்துச் சேவை குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வந்தனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு தளர்வு மேற்கொள்ளப்படவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.