நோய் அறிகுறிகளுடன் இருந்த யாசகர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை…

(க.கிஷாந்தன்)

நோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (21) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் லக்மாந்த சில்வா தெரிவித்தார்.

குறித்த யாசகர் பொகவந்தலாவ பகுதியிலிருந்தே நேற்றிரவு (20) தலவாக்கலைக்கு வந்துள்ளார்.

இவ்வாறு வருகை தந்து பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த அவருக்கு இருமல் உட்பட காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்தே லிந்துலை பகுதி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் உட்பட உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்களின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.