கொரோனா தொற்று சந்தேகத்தில் பேலியகொட மீன்சந்தையில் 500 பேருக்குப் பரிசோதனை!

பேலியகொட மீன் வர்த்தக மத்திய நிலைய மீன் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட 500 பேரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய, இவர்களுக்கு இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் மீன்களைப் பெற்றுக்கொண்ட பிலியந்தலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதையடுத்து, இந்தப் பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.