மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை!
ஒன்ராறியோவின் உயர் நீதிமன்றம், மாகாணத்தில் உள்ள செவிலியர் சங்கத்திற்கு ஒரு தடை உத்தரவை வழங்கியுள்ளது.
மாகாண தொற்று கட்டுப்பாடு மற்றும் சுகாதார தரங்களுக்கு இணங்க கொவிட்-19 காரணமாக, டசன் கணக்கான நோயாளிகள் இறந்த, மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து போதுமான அளவில் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈட்டன்வில் கேர் சென்டர் இன்க்., அன்சன் பிளேஸ் சென்டர் சென்டர் மற்றும் ஹாவ்தோர்ன் பிளேஸ் கேர் சென்டர் – இவை அனைத்தும் ரிக்கா கேர் சென்டர்களுக்கு சொந்தமானவை, இது ரெஸ்பான்சிவ் குழுமத்தின் இயக்க பங்காளியாகும் – இவை அனைத்தும் தடை உத்தரவில் பெயரிடப்பட்டுள்ளன.
இதுவரை, மூன்று பராமரிப்பு இல்லங்களில் 70இற்க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொவிட்-19 காரணமாக இறந்துவிட்டனர். மேலும் அந்த வீடுகளில் பணிபுரியும் பல செவிலியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை