தம்புள்ளையில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத 50 பேர் கைது
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாது, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாது பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றாத அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை