கொரோனா வைரஸ் மீட்பு திட்டம்: காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என கோரிக்கை!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முதலில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என 30 நாட்டு அரசாங்கங்களுக்கும் பிரித்தானியா வலியுறுத்தவுள்ளது.

பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் முயற்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் இரண்டு நாள் இணையவழியான மாநாடு இடம்பெறவுள்ளது. இது ‘பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடல்’ என்று அழைக்கப்படுகிறது.

தொற்றுநோயின் கடுமையான கட்டம் முடிந்ததும், பச்சைவீட்டு வாயு பொருளாதார மீட்சியை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதில் இது கவனம் செலுத்தப்படும்.

இதுகுறித்து இங்கிலாந்தின் காலநிலை செயலாளரும், COP26இன் தலைவருமான அலோக் ஷர்மா கூறுகையில், “உலகளாவிய காலநிலை லட்சியத்தை அதிகரிப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன், இதனால் நாங்கள் பரிஸ் ஒப்பந்தத்தை வழங்குவோம். கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க வேண்டியது போல, உலகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடலில், லட்சியத்தை எவ்வாறு உண்மையான செயலாக மாற்ற முடியும் என்பதை விவாதிக்க நாங்கள் ஒன்றிணைவோம்” என கூறினார்.

பிரித்தானியா மற்றும் இத்தாலியால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2020 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு’ (COP26) ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் நவம்பரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் தற்போது 2021ஆம் திகதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.