கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2302ஆக உயர்வு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2302ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,888ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு 155பேர் உயிரிழந்ததோடு, 1778பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 26,117பேர் சிகிச்சை பெற்றுவருவதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 15469பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை