மே மாதத்தில் ஓய்வூதிய மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்!
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, “ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், சிறுநீரகம், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களின் சம்பளம் மே 25ஆம் திகதிக்குள் வழங்கப்படும். இதற்கு தேவையான நிதி திறைசேரியில் உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை