யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!
யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக எச்சரித்த பின்னர், பொலிஸ் பிணையில் விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை