விக்டோரியாவில் அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையம் திறந்துவைப்பு!
அவசர மற்றும் முதன்மை கவனிப்பு மற்றும் விரைவாக அணுகப்படும் மனநல சிகிச்சைகளுக்காக, விக்டோரியாவில் புதிய அவசர மற்றும் முதன்மை பராமரிப்பு மையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பேவில் திறந்துவைக்கப்பட்டுள்ள குறித்த முதன்மைப் பராமரிப்பு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
மே மாதத்திற்கு, மருந்தகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஜூன் 1ஆம் திகதிக்குப் பிறகு, இந்த மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக பணியாளர் அமர்த்தப்பட்டவுடன், மருந்தகம் ஒரு நாளைக்கு 50 முதல் 60 நோயாளிகளை எதிர்பார்க்கும்.
ஐலண்ட் ஹெல்த் ஒரு சில மாதங்களுக்குள் மருந்தகத்தில் முழுமையாக பணியாளர்களை அமர்த்துவதில் செயற்படுகிறது. மேலும் 5000 நோயாளிகள் வரை நீளமான பராமரிப்புக்காக இணைக்க திட்டமிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை