வட கொரிய தலைவர் உயிருடன் இருக்கிறார் ஆனால்…. முக்கிய தகவலை வெளியிட்ட முன்னாள் அதிகாரி
வட கொரிய தலைவரான கிம் ஜோங் உன் உயிருடன் இருப்பதாகவும் ஆனால், உடல் நலக் குறைவு காரணமாக அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாது என்றும் முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
வட கொரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் தூதரகப் பணியாளரான தே யோங் ஹோ, இந்த விடயத்தினை உலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
வடகொரியாவில் நடைபெற்ற அரசு மற்றும் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கிம் ஜோங் உன், பங்கேற்காததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்வேறு வதந்திகள் பரவின.
கிம் ஜோங் உன், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், இருதய சிகிச்சையின் பின் சுயநினைவு அற்ற நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உயிருடன் நலமாக இருப்பதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உடைய பாதுகாப்பு ஆலோசகர் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்தநிலையில் வட கொரியாவிலிருந்து வெளியேறி தற்போது தென் கொரியாவில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தே யோங் ஹோ, கிம் ஜோங் உன்-இன் தற்போதைய நிலைமை குறித்து ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவருக்கு உண்மையிலேயே ஏதாவது அறுவைச் சிகிச்சையோ வேறு ஏதேனும் நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், ஒரு விடயம் தெளிவு, அவரால் தானாக எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது’ என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை