சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!
கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இணையத்தளத்தினூடாக பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை