பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டார நாயக்க மாவத்தையில் சுமார் ஆயிரத்து 399 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பகுதியை அண்மித்துள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் தங்களுக்கும் P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை