கொட்டும் மழையிலும்; திகா உதயா நிவாரண பணி தொடர்கிறது…
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பலரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.இந்
இவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நிவாரணங்கள் பல்வேறு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதிகமானவர்களுக்கு இன்னமும் எவ்வித நிவாரணமும் கிடைக்காத நிலையிலேயே உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மலையகப்பகுதியில் கொழுப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணங்களை வழங்கும் திட்டத்தினை திகா உதயா நிவாரண பணி எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிவாரணப்பணி நேற்று கொட்டும் மழையினையும் பாராது மனிதாபின பணியாக குறித்த நிவாரண பணி வட்டவளை லொனெக் தோட்ட பகுதியில் உள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்பட்;டன.
இதன் போது நிவாரணங்கள் கிடைக்காத தெரிவு செய்யப்பட்ட மிகவும் பல வறிய குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதன் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அத்திவசிய உலர் உணவு பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த நிவாரண பணி மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை