கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் திடீர் சாவு!
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார்
குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை