விடுமுறையில் சென்ற கடற்படை தீவகத்தில் தனிமைப்படுத்தலில்! வெளியே செல்லாதமையை டக்ளஸ், அங்கஜன் உறுதிப்படுத்தவேண்டும்
தென்னிலங்கைக்கு விமுறையில் சென்ற கடற்படையினரை தீவகத்திலுள்ள கடற்படை முகாம்களில் தனிமைப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் முகாம்களைவிட்டு வெளியேறாமையை அரசில் அங்கம் வகிக்கின்ற எமது தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ், அங்கஜன் போன்றோர் உத்தரவாதமளிக்கவேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மத்தியகுழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-
தென்னிலங்கைக்கு விடுமுறையில் சென்றுவந்த கடற்படையினரை இரவோடு இரவாக கொண்டுவந்து தீவகத்திலுள்ள சில கடற்படை முகாம்களில் ( உதாரணமாக புங்குடுதீவு கழுதைப்பிட்டி இறங்குதுறை முகாம் , வல்லன் கோட்டம்பர முகாம் ) தனிமைப்படுத்தியிருப்பதாக இணையத்தள செய்திகளும் , அங்கு வாழ்கின்ற மக்கள் தரப்பினரும் தெரிவிக்கின்றனர் . இதனை நாங்கள் எதிர்க்கவில்லை . ஆனாலும் அந்த முகாம்களிலுள்ள ஏனைய கடற்படையினர் சோதனை சாவடிகளில் முன் நிறுத்தப்படுவது பெரிதும் ஆபத்துக்குரியது . அதேபோன்று கடற்படையினர் மக்கள் சாதாரணமாக போய்வருகின்ற இடங்களுக்கும் சென்று வருவது பெரிதும் ஆபத்துக்குரியது .
ஆகவே இது தொடர்பாக தற்போதைய அரசில் அங்கம் வகிக்கின்ற திரு. டக்ளஸ் தேவானந்த , திரு. அங்கஜன் போன்றவர்கள் இதனை தெளிவுபடுத்துவார்களா ? கடற்படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆவன செய்வார்களா ? – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை