ஊர்சட்ட காலப்பகுதில் சட்ட விரோதமான முறையில் இருவேறு பிரதேசங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்
ஊரடங்குச் சட்டம் காலப்பகுதியில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரிட்வெல்,பெட்ரசோ ஆகிய இருவேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட வேறு நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (01) இரவு சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போலிசார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரிட்வெல் மற்றும் பெட்ரசோ தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் என போலிசார் மேற்கொண்டனர் ஆரம்பகட்ட விசாரணை தெரியவந்துள்ளன.
குறித்த நபர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் மற்றும் உபகரணங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை