பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்!
பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக்குவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாக, வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பயணிகள் தங்கள் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு, தளர்த்தப்படும்போது பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது.
எனினும், இதுவரை இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் வெப்பநிலை சோதனைகளுக்கு முன்னுரிமை இல்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்த போதிலும், முற்பாதுகாப்பு காரணமாக தங்களின் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்வது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை, பிரதமர் பொருளாதாரத்தை எவ்வாறு மீள கட்டமைப்பது மற்றும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது என்பது குறித்த திட்டங்களை வகுக்கவுள்ளார்.
37.8 செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை இருப்பது, கொரோனா வைரஸின் இரண்டு முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மற்றொன்று வறண்ட, தொடர்ச்சியான இருமல் ஆகும்.
கருத்துக்களேதுமில்லை