பேருவளை, அக்குரண பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (ஞாயிறுக்கிழமை) தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

கொரோனா தோராளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கண்டி மாவட்டத்தில் அக்குரணை, களுத்துறை மாவட்டத்தில் பேருவளை கிராமங்கள் முற்றுமுழுதாக மூடி தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.