தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார்.
ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தங்களது தாத்தாக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு (பொரிஸ் ஜோன்சனுக்கு) மரியாதை செலுத்தும் விதமாக ‘வில்ஃப்ரெட் லோவ்ரி நிக்கோலஸ் ஜொன்சன்’ (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமொன்ட்ஸ் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸால் நோய்வாய்ப்பட்ட முதல் உலகத் தலைவரான பொரிஸ் ஜோன்சன், லண்டனில் உள்ள புனித தோமஸ் மருத்துவமனையில், 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை