மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு 240 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு
மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘இந்த நிதி மனநலப் பராமரிப்பு மற்றும் முதன்மை பராமரிப்புக்கான புதிய தளங்களை நோக்கி செல்லும் அத்துடன் தற்போதுள்ள மெய்நிகர் பராமரிப்பு ஆதரவை விரிவுபடுத்தும்,
கூடுதலாக, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானதாக கருதப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை சீராக வழங்குவதில் கனடா கவனம் செலுத்தும். புதிய விநியோக ஆலோசனைக் குழு பற்றி மேலும் விபரங்கள் பிற்பகுதியில் வெளிவரும்.
நமக்கு பயனுள்ள சிகிச்சைகள் கிடைக்கும் வரை அல்லது இன்னும் சிறப்பாக, ஒரு தடுப்பூசி, முகமூடிகள் முதல் செயற்கை சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்கள்) வரை என அனைத்திற்கும் நம்பகமான வழங்கல், நமக்கு இன்னும் தேவை’ என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை