இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 302 எனும் விசேட விமானம், இன்று காலை 7.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்றுநோய் காரணமாக, சிங்கப்பூருக்குச்  செல்ல முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த அந்த நாட்டுப் பிரஜைகள் 10 பேர், இவ்விமானத்தில் அங்கு சென்றுள்ளனர்.

இவ்விமானம்  இலங்கை மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்தை வந்தடையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.