வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்!

பிரித்தானியாவின் பிரதான விமான சேவைகளில் ஒன்றான வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம், தனது 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

லண்டனின் கட்விக் விமான நிலையத்துடனனான தனது செயற்பாடுகள் யாவற்றையும் நிறுத்திக்கொள்வதாக பிரித்தானியாவின் வெர்ஜின் அட்லான்ட்டிக் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், குறித்த விமான சேவை நிறுவனம் சார்பாக இங்கிலாந்தில் பணிபுரியும் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கட்விக் விமான நிலையத்துடனான பயணப் போக்குவரத்து மற்றும் ஏனைய செயற்பாடுகளை வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை துண்டிப்பதை நிராகரிக்க முடியவில்லை என பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் அறிவித்திருந்தமையினை தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானிகள் சங்கம் குறித்த தீர்மானம் ஓர் பேரதிர்ச்சி என தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல விமான சேவை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பாதிப்பினை எதிர்கொண்டுள்ள வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் 10,000 ஊழியர்களை கொண்டிருக்கும் நிலையில், அதில் கணிசமானவர்களை வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்திடம் கடன் தொகையினை பெற்றுக்கொள்வதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம், இது தொடர்பாக தெரிவிக்கையில், குறித்த வேலை நிறுத்தமானது நிறுவனத்தின் அனைத்து நிலையினருக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஷாய் வெயிஸ், ‘நமது விமான சேவை ஆரம்பித்து 36 ஆண்டுகளில் பல பேரனர்த்தங்களை சந்தித்துள்ளோம்.

எதுவும் பலரது வாழ்வினையும் வாழ்வாதாரத்தையும் அளித்த கொரோனா பரவல் போல் இருந்தது இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.