சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஊசி மருந்துகளை வழங்கும் நடவடிக்கை 3 வாரங்கள் தாமதமடைந்திருந்ததாகவும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை