திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் விடுதலை.
வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பிற்கு அமைய திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து சிறு குற்றங்கள் புரிந்த நான்கு சிறைக்கைதிகள் இன்று(7) விடுதலை செய்யப்பட்டனர்.
தாபரிப்பு,சாராயம் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்விடுதலை செய்யும் நிகழ்வு திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதான ஜெயிலர் சமந்த லியனகே,புனர்வாழ்வு உத்தியோகத்தர்,சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
எப்.முபாரக்
கருத்துக்களேதுமில்லை