உக்ரேனிலிருந்து ஆறு பொறியியலாளர்கள் நாட்டிற்கு வருகை
உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
உக்ரேன் – கியெவ் நகரிலிருந்து உக்ரேன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் அதிகாலை 4.00 மணியளவில் குறித்த ஆறு பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை விமான சேவைக்குரிய விமானங்களின் திருத்தப் பணிகளுக்காகவே குறித்த ஆறு பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக உக்ரேன் செல்ல முடியாதிருந்த அந்நாட்டுப் பிஜைகள் 116 பேர், குறித்த விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை