அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய தீர்மானம்!
அத்தியாவசிய மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அரச மருந்தகக்கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்பட்ட அந்நிய செலாவணியை சேமிக்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் செயற்படும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் 12 வீதம் முதல் 15 வீதம் வரையிலான மருந்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பாசிடோல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் பெரசிட்டமோல் வில்லைகள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இலங்கை மருந்தாக்கட் கூட்டுதாபனம் தூசி துகள்கள் அற்ற சிறந்த சுகாதார நடைமுறைகளுடன் உயர் தரமான மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றது.
மருந்து உற்பத்தி துறையில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் செயற்பட்டுவரும் அரச மருந்தகக்கூட்டுத்தாபனம் மேலும் பல புதிய இலக்குகளை அடைவதற்காக நவீன தொழினுட்ப முறைகளை முறைகளை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை