இலங்கை வந்தடைந்தார் இந்தியாவின் புதிய தூதுவர்- மருந்துப் பொருட்களும் வந்தன

இலங்கைக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே மருந்து பொருட்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) இலங்கையினை வந்தடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தனது கடமையை பொறுப்பேற்க முடியாத நிலையில் காணப்பட்ட புதிய தூதுவர் இந்தியாவிலிருந்து 12.5 தொன் மருந்துப்பொருட்களுடன் இலங்கை வந்த விமானப்படை விமானத்தில் இலங்கையினை வந்தடைந்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளராகவும் இந்திய பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றிய பாக்லே கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே அவர் மருந்துப்பொருட்களுடன் இலங்கை வந்த இந்திய விமானப்படையின் விமானத்தில் இலங்கை வந்துள்ளார். இவர் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் நெருக்கடி உருவான பின்னர் இலங்கைக்கு இந்தியா மருந்துப்பொருட்களை அனுப்பிவைத்துள்ளமை இது நான்காவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.