போலி தயாரிப்புகள் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
கொரோனா வைரஸ் தொடர்பான போலி தயாரிப்புகளை விற்கும் குற்றவாளிகளிடமிருந்து, விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டன் சபையால் 500,000இற்க்கும் மேற்பட்ட தரமற்ற முகமூடிகள் கைப்பற்றப்பட்டதனையடுத்து, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் வேல்ஸில் உள்ள சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றம், மோசடிகளைப் புகாரளிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மோசடி செய்பவர்கள், போலி மருத்துவ பொருட்கள் மற்றும் பிற தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதால், அச்சத்தை பரப்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, லிங்கில், 2,600 சட்டவிரோத தொற்றுநீக்கி திரவ போத்தல்கள் மற்றும் 500,000 தரமற்ற முகமூடிகள் சந்தையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை