இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு..!
கிளிநொச்சி – இயக்கச்சி 55 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 ஆண்களும், 138 பெண்களும் இந்த தனிமைப்படுத்தப் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், 18 நாட்களில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை