ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான்
 

ஊரடங்கு தளர்த்தப்படுவது    பரீட்சார்த்த முயற்சியாகத்தான்   ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்   ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

கொவிட் 19 தொற்று நிலை காரணத்தினால் அண்ணளவாக இரண்டு மாதகால இரண்டு மாதங்கள் இலங்கை முடக்கப்பட்டு அரசு இயந்திரம் மெதுவாக்கப்பட்டு மக்களின்  வாழ்க்கை முறையில் தடங்கல்கள் ஏற்பட்டு இருந்த நிலை மாறி நாளை ஊரடங்கு நிலை தளர்த்தப்பட்டு மக்கள் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு காலடி எடுத்து வைக்கும் முதலாவது விடயம் ஆரம்பிக்கப்படவுள்ளது.  என்னைப் பொறுத்தளவில் கிடைக்கின்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கொவிட் 19 தொற்று  நிலை ஓரளவு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அரசாங்கமும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு  அமைவாக தான் முதலாவது நடவடிக்கையை தொடங்குகிறது.

இருந்தாலும் கொவிட் 19 அச்சுறுத்தல் இலங்கையில் முற்று முழுதாக  நீங்கிவிடவில்லை நாளொரு வண்ணம் ஆக நோயாளிகள் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த அடிப்படையில்தான் நாங்கள் நாளைய நிகழ்வுகளை அதாவது இந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில் நாங்கள் எந்த விதமாக காரியம் ஆற்ற முடியும் என்ற நடவடிக்கைகளை இந்த விதமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற விதிகளை பற்றி நாங்கள் மிகவும் அழுத்தமாக வேண்டிய சூழலில்  இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் நாளை போக்குவரத்துக்கள் அதாவது பொது போக்குவரத்துகள் தனியார் போக்குவரத்துக்கள்  ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்த போக்குவரத்துக்கள் எல்லாம் பொதுமக்களுக்கான தனிப்பட்ட விடயங்களை கொண்டு செல்வதற்கான அல்லது உறவினர்களை பார்ப்பதற்காகஇ பொருட்களை வாங்க செல்வதற்கானஇ போக்குவரத்து நடைமுறைகளாக  இருக்க போவது இல்லை.  இது பொது உத்தியோகத்தர்களுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும்  உத்தியோகத்தர்களுக்கான அல்லது பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய கடமைகளை ஆற்றுவதற்கு வருவதாகத்தான் நடைமுறைப்படுத்த இருக்கின்றது. அதுவும் அந்த போக்குவரத்து குறித்து விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன ஒரு பஸ் வண்டியில் 50 ஆசனங்களில் 25 நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள் அவர்கள் சமூக இடைவெளியான  ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு ஆசனத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் தான் அந்த போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

பொது நிருவாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது அத்துடன் தனியார் நிறுவனங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடைகள் சந்தைகள் சலூன் கடை திறக்கப்பட உள்ளது.
இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாகத்தான்  இவை  நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.