மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கையர் நாட்டுக்கு!
இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் கோலாலம்பூர் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 315 எனும் விசேட விமானம், பயணிகளுடன் நேற்று மாலை 4.12 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவ்வாறு வருகை தந்தவர்களுக்கு, இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுது.
அத்தோடு, இப்பயணிகளுக்கு விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் விசேட பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை